கேரளாவில் 4 ஆண்டுகளில் 5,338 மாணவிகள் மாயம்… தி கேரளா ஸ்டோரிஸ் சம்பவமோ..? எச்சரிக்கும் வானதி சீனிவாசன்

Author: Babu Lakshmanan
22 April 2024, 1:19 pm

கேரளாவில் கடந்த 3 ஆண்டுகளில் 5,338 மாணவிகள் மாயமான நிலையில், பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய நேரம் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியில் உருவாகி வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அரசுக்கு எதிரான வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் வகுப்புவாத திரைப்படம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க: மீண்டும் மீண்டுமா..? தமிழக அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் : அன்புமணி எச்சரிக்கை..!!

அதாவது, கேரளாவில் இளம்பெண்களை குறிவைத்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, அவர்களை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைப்பது போன்ற கதைக்களத்தை அந்தப் படம் கொண்டிருக்கும். இந்தப் படத்திற்கு பாஜக உள்ளிட்ட கட்சியினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளை நிஜம் என்று நம்ப வைப்பது போன்று, கேரளாவில் இளம் பெண்கள் மாயமாகியிருப்பதாக தமிழக பாஜக எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிர் அணியின் தலைவியுமான வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

கேரளா அரசிடம் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கடந்த 4 ஆண்டுகளில் 5,338 இளம் பெண்கள் மாயமாகியிருப்பதா தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விபரங்களை வெளியிட்ட வானதி சீனிவாசன், பெண்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தாத கேரள அரசு, பாஜகவை எதிர்த்து அரசியல் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாயமான பெண்களின் குடும்பத்தினரும், சமூகத்தினரும் தாங்க முடியாத வேதனையில் இருப்பதாகவும், நமது பெண்களை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?