வகுப்பறையில் படமெடுத்து ஆடிய ராஜ நாகம்.. அலறிய மாணவர்கள் : ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2024, 12:03 pm

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாத்தப்பட்டினத்தில் அரசு குருகுல உண்டு உறைவிட பள்ளியில் மாணவர்கள் விடுதியில் ஜன்னல் வழியாக ராஜ நாகம் ஒன்று மாணவர்கள் அறைக்குள் வந்தது. திடிரென சுமார் 12 உயரமுள்ள ராஜநாகம் மாணவர்கள் பைகளின் மீது நின்று படமெடுத்து ஆடியதை பார்த்து அலறி அடித்து கொண்டு ஓடி விடுதி காப்பாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து அங்கிருந்து வந்த பாம்பு பிடிப்பவர் அதனை பிளாஸ்டிக் குழாய் மூலம் பையில் அடைத்து வனப்பகுதியில் பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டனர். இருப்பினும் மாணவர்கள் மத்தியில் பாம்பு வந்து சென்ற அச்சம் போகாததால் அறைக்கு செல்வதை மறுத்து விட்டனர்.

பின்னர் ஆசிரியர்கள் மாணவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். விடுதி சுற்றி உள்ள பகுதியில் சுத்தமாகவும் செடிகள் வளராமல் பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 264

    0

    0