ரீல்ஸ் மோகத்தால் பறிபோன 18 வயது இளைஞரின் உயிர்.. அதிர்ச்சி வீடியோ வைரல்!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2024, 1:55 pm
Insta
Quick Share

ரீல்ஸ் செய்ய ஆசைப்பட்டு 18 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் 18 வயது இளைஞர் தௌசிப் 100 அடி உயரத்தில் இருந்து கீழே உள்ள தண்ணீரில் குதித்து அதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட முயற்சி செய்துள்ளார்.

இதற்காக கடந்த திங்கள்கிழமை மாலை சுமார் 100 அடி உயரத்தில் இருந்து குவாரி ஏரியில் குதித்துள்ளார். அதனை அக்கம் பக்கத்தில் இருந்த அவருடைய நண்பர்களும் வீடியோ எடுத்தனர்.

அப்போது, தண்ணீரில் விழுந்து அவர் நீந்தத் தொடங்கியவுடன், மெதுவாக நீரில் மூழ்கினார். இதையடுத்து மூச்சி திணறி தௌசிப் உயிரிழந்தார்.

இதனை பார்த்த அதிர்ச்சியான அவருடைய நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால், அவர்களால் காப்பாற்ற முடியவில்லை, உடனடியாக போலீசாருக்கும் தகவல் அளித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க: போலீஸ் விசாரணையின் போது தாக்குதல்? தொழிலாளி மரணத்தில் திருப்பம்.. உடலை தோண்டி எடுக்க உத்தரவு!

பின் அவருடைய சடலம் மீட்கப்பட்டது. சடலத்தை மீட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு விஜய் குமார் குஷ்வாஹா கூறுகையில், பல அடி ஆழமான தண்ணீரில் குதித்த அந்த இளைஞன் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

COURTESY : News11 Bharat

ரீல்ஸ் செய்ய நினைத்து 100 அடி உயரத்தில் இருந்து குவாரி ஏரியில் குதித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 127

0

0