8 பேரை காவு வாங்கிய லிப்ட் : கட்டுமானப் பணியின் போது நடந்த மர்மம்? விபத்து நடந்தது எப்படி..?!!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2022, 3:29 pm

குஜராத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கட்டிடத்தின் லிப்ட் அறுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.

குஜராத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றின் லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குஜராத் பல்கலைக்கழகத்திற்கு அருகில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கட்டிடம் ஒன்றின் லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

ஏழாவது மாடியில் இருந்து லிப்ட் அறுந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த நபர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 452

    0

    0