மருத்துவ மாணவியிடம் நட்பாக பழகி பின்னர் காதலில் வீழ்ந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இளைஞர் கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா நகரில் தங்காவர் காவல் நிலையத்தில் மருத்துவ மாணவி ஒருவர் பரபரப்பு புகார் அளித்து உள்ளார்.
அந்த புகாரின்படி, மருத்துவ மாணவி ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் படித்து வந்து உள்ளார். அப்போது, சமூக ஊடகம் வழியே ஆதித்ய சர்மா என்ற பெயரில் மாணவியிடம் நபர் ஒருவர் நட்பு கொண்டுள்ளார்.
அவரது அறிவுறுத்தலின் பேரில், கிரேட்டர் நொய்டாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் மாணவி சேர்ந்து உள்ளார். அதன்பின்னரே, அவரது பெயர் ஆதித்ய சர்மா இல்லை என்பதும், அவரது பெயர் முகமது அக்லக் ஷேக் என்பதும் மாணவிக்கு தெரிய வந்துள்ளது.
உண்மையான பெயரை மறைத்து, தன்னை திருமணம் செய்ய அந்நபர் முயற்சித்து உள்ளார் என மாணவி குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.
டெல்லி லட்சுமி நகரில் உள்ள தனது நண்பரின் இல்லத்திற்கு வரும்படி மாணவியை அந்நபர் அழைத்து உள்ளார். அதனையேற்று சென்ற மாணவியை வலுகட்டாயப்படுத்தி, உடல்ரீதியான உறவை வைத்து கொண்டார் என அக்லக்கிற்கு எதிராக குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
அந்த மாணவி புகாரில், தனிப்பட்ட அந்தரங்க புகைப்படங்களை முகமது அக்லக் எடுத்து வைத்து கொண்டு, வைரலாக்கி விடுவேன் என மிரட்டுகிறார் என்றும் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி 27-ந்தேதி, அக்லக்கும் அவரது தந்தை முகமது மொயின் ஷேக் ஆகியோர் கல்லூரிக்கு வந்து மாணவியை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய முயன்றுள்ளனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவியை, அக்லக் பாலியல் துன்புறுத்தல் செய்து, தாக்கி உள்ளார் என மாணவி புகாரில் தெரிவித்து உள்ளார்.
இந்த வழக்கில் புகாரில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்ட தந்தை மற்றும் மகன் என இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுபற்றி கிரேட்டர் நொய்டா ஏ.டி.சி.பி. தினேஷ் குமார் சிங் கூறும்போது, பிரிவு 323, 504, 506, 376 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து, மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் இருவரையும் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.