மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண்ணை 12 முறை கத்தியால் குத்தி கொலை செய்த நபர்… விசாரணையில் பரபரப்பு தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan16 July 2023, 1:00 pm
மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண்ணை 12 முறை கத்தியால் குத்தி கொலை செய்த நபர்!!
கேரளாவில் மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண்ணை கொலை செய்த சம்பவத்தில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இளம்பெண்ணை கத்தியால் குத்த முயன்ற போது, தப்பியோடியதால் துரத்தி சென்று 12 முறை குத்தி கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் பள்ளிப்பருவம் முதல் இருவரும் பழகி வந்த நிலையில், வேறொருவரை திருமணம் செய்து, தன்னுடன் பேசுவதை நிறுத்தியதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எர்ணாகுளம் அருகே அங்கமாலி பகுதியில் உள்ள மருத்துவமனையில், லிஜி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் தொடர்பாக மகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.