காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை விடாமல் துரத்திய நபர் : கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு தலை காதலால் அரங்கேறிய விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2022, 2:23 pm

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள குர்ராடா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் வெங்கட சூரிய நாராயணா. அவர் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை சில மாதங்களாக காதலித்து வந்தார்.

சூரிய நாராயணாவின் காதலை அந்த இளம் பெண் ஏற்கவில்லை. இதனால் அந்த பெண் மீது கோபமடைந்த சூரிய நாராயணா இன்று அந்த இளம்பெண் சாலையில் சென்று கொண்டிருந்தபோது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்தார்.

அப்போது அங்கிருந்தவர்கள் சூரிய நாராயணாவை பிடித்து தர்ம அடி கொடுத்து மரத்தில் கட்டி வைத்து அந்த பெண்ணை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அந்த இளம் பெண் மரணம் அடைந்து விட்டார். தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த பெத்தபூடி போலீசார் சூரிய நாராயணாவை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?