சொந்த அரசையே விமர்சித்த அமைச்சர்… பதவியில் இருந்து நீக்கிய முதலமைச்சர் : அரசியலில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
22 ஜூலை 2023, 8:45 காலை
Minister - Updatenews360
Quick Share

மணிப்பூர் பிரச்னையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசும் முன், தனது சொந்த இடத்தில் உள்ள பிரச்னையை முதல்வர் கவனிக்க வேண்டும் என்று ராஜேந்திர சிங் கூறியிருந்தார்.

இதையடுத்து அவரை கட்சியில் இருந்து காங்கிரஸ் நீக்கியுள்ளது. ராஜஸ்தானில் அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், அசோக் கெலாட் (காங்கிரஸ்) அரசை, பாரதிய ஜனதா கட்சி கடுமையாக தாக்கிப் பேசியுள்ளது.

ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதாவின் பதவி நீக்கம் தொடர்பான அறிவிப்பை ராஜஸ்தான் ராஜ்பவன் செயலகம் வெளியிட்டது.

மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதாவை பதவி நீக்கம் செய்ய, அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், இன்று வெள்ளிக்கிழமை மாலை அமைச்சரவையில் இருந்து பரிந்துரை செய்ததாக ராஜ் பவன் தெரிவித்துள்ளது.

உண்மையைப் பேசியதற்காக ராஜஸ்தான் அரசில் அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார், இதிலிருந்து அங்கு நேர்மையான உள்ளம் கொண்டவர்களுக்கு இடம் இல்லை என்றும், ஊழல்வாதிகள் மற்றும் பொய்யர்களுக்கு மட்டுமே அங்கு வரவேற்பு உள்ளது என்று தெளிவாக தெரிகிறது என்று கடுமையாக சாட்டியுள்ளது பாஜக அரசு.

ராஜஸ்தான் சட்டப் பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர், மணிப்பூரில் பெண்களின் நிர்வாண வீடியோ குறித்து சற்று காட்டமாக பேசினார். அப்போது அவரை இடைமறித்து பேசிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ராஜேந்திர சிங் குதா, தனது அரசுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

ராஜஸ்தானில் பெண்களை பாதுகாக்க தவறிவிட்டோம், ஆகவே முதலில் நாம் நமது இடத்தை குறித்து கவலைப்பட வேண்டும். பிறகு தான் அடுத்த மாநிலத்தை பற்றி பேசவேண்டும் என்று கூறியிருந்தார்.

  • Thiruma அந்த நிகழ்ச்சிக்கு விஜய் வந்தால் நான் கலந்து கொள்வது சந்தேகம்தான்.. திருமாவளவன் ஓபன் டாக்!
  • Views: - 339

    0

    0