6 பேரின் உயிரை காவு வாங்கிய கொசுவர்த்தி…? தூங்கிக் கொண்டிருந்த போது நேர்ந்த பரிதாபம்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 March 2023, 12:49 pm

டெல்லியில் சாஸ்திரி பார்க் பகுதியில் ஒரு வீட்டில் கொசு அதிகமாக இருப்பதால் கொசுவர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு தூங்குவது வழக்கம்.

அது போல் நேற்று இரவும் கொசுவிரட்டியை ஏற்றியுள்ளனர். இந்த நிலையில் காலையில் நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டு கதவு திறக்கப்படவில்லை.

வீட்டை விட்டு யாரும் வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்போது வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு சென்றனர். அங்கு ஒரு அறையில் 6 பேரும் சடலமாக காணப்பட்டனர். உடனே அறைக்குள் சென்ற போதும் போலீஸாருக்கும் லேசாக மூச்சுத்திணறியது.

இதனால் அங்கிருந்த ஜன்னல்களை திறந்து விட்டனர். பின்னர் அவர்களை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் அவர்களது வீட்டில் கொசு விரட்டி துகள்கள் இருந்ததை கண்டறிந்தனர். எனவே அவர்கள் அளவுக்கு அதிகமான கொசு விரட்டிகளை ஏற்றியதால் அதில் உள்ள கார்பன் மோனாக்சைடு என்ற நச்சு அறை முழுவதும் பரவி, மூச்சுதிணறல் ஏற்பட்டிருக்கும் என உறுதிசெய்துள்ளனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ