2 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொன்ற தாய்.. எமனாக வந்த செல்போன் : தனியறையில் நடந்த கொடூரம்!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2023, 8:28 pm

2 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொன்ற தாய்.. எமனாக வந்த செல்போன் : தனியறையில் நடந்த கொடூரம்!

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடிஹ் மாவட்டத்தை சேர்ந்தவர் நிசாமுதீன். இவரது மனைவி அப்சனா. இந்த தம்பதிக்கு 4 மற்றும் 2 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

கணவன் மனைவிக்கு இடையே சில நாட்களாக கருத்துவேறுபா நிலவி வருவதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழன்று இரவு கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தனது 2 வயது குழந்தையுடன் அறைக்குள் சென்று கதவை பூடடியுள்ளார்.

பின்னர் வெகு நேரமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார் அப்சனா. அப்போது செல்போனில் பேச பேச குழந்தை அழுது கொண்டே இருந்ததால் கடுப்பான தாய், குழந்தையின் கழுத்தை நெறித்துள்ளார்.

சில நிமிடங்களில் பேச்சு மூச்சு இல்லாமல் குழந்தை சரிந்தது. இதையடுத்து கதவை திறந்த கணவன், குழந்தை அசைவின்றி கிடந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் 2 வயது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்,

உடனே போலீசில் புகார், அப்சனாவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனில் பேசியவர் கள்ளக்காதலனா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ