4 வயது குழந்தையை கொன்று சூட்கேஸில் உடலை எடுத்து வந்த தாய்.. கொலை வழக்கில் கணவர் அளித்த பகீர் வாக்குமூலம்!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுசனா சேத் (39) என்பவர் பெங்களூரூவில் Mindful AI LAB எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி விவகாரத்து ஆகிவிட்டது. கணவர் இந்தோனேசியாவில் வசித்து வருகிறார். தற்போது 4 வயது குழந்தையுடன் சுசனா சேத் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 6ம் தேதி கோவா சென்றிருந்தார்.
அப்போது, தனது 4 வயது குழந்தைக்கு இருமல் மருந்துகளை கொடுத்து கொலை செய்ய முயன்றதுடன், தலையணையை எடுத்து முகத்தில் வைத்து அழுத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், சடலத்தை சூட்கேஸில் வைத்து காரில் எடுத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்து, அவரை பாதி வழியில் போலீசார் மடக்கி பிடித்தனர்.
பின்னர், அவரிடம் மனநலப் பரிசோதனையை செய்த போலீசார், நேற்று மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக கோவாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது, முகத்தை கருப்பு துணியால் மூடியபடி வந்த அவர், சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் குறித்த பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், தற்கொலைக்கு முயன்ற போது அவரது கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, அவரது கைப்பையை போலீசார் சோதனை செய்ததில், அதில் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதாவது, டிஸ்யூ பேப்பரில், தனது குழந்தையை பார்க்க கணவனுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தது தனக்கு பிடிக்கவில்லை என்று குறிப்பிடிப்பட்டிருந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விவகாரத்து கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதனிடையே, இந்த கொடூர கொலை சம்பவம் நடக்கும் போது இந்தோனேஷியாவில் இருந்த பெண்ணின் கணவர் வெங்கட் ரமணன் பெங்களூருக்கு விரைந்தார்.
அவரிடம் இன்று போலீசார் விசாரணை மேற்கொண்டார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு என்பதால் வெங்கட் ரமணன் இன்று விசாரணைக்கு செல்லும் போது அவரிடம் பேட்டி காண செய்தியாளர்கள் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் குவிந்து இருந்தனர். எனினும், செய்தியாளர்களிடம் பேச மறுத்த வெங்கட் ரமணன், போலீசாரிடம் தனது வாக்குமூலத்தை அளித்தார். பின்னர் இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “தனக்கும் தனது மனைவிக்கும் இடையே விவாகாரத்து நடைமுறைகள் சென்று கொண்டிருந்தாதாக வெங்கட் ரமணன்” கூறினார். மேலும், மகனை பார்க்க தனக்கு உரிமை இருந்தாலும் சுச்சனா சேத், கடந்த 5 வாரங்களாக பார்க்க அனுமதி அளிக்கவில்லை என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.