சொத்தை எழுதித் தர மறுத்த தாய்.. துடிதுடிக்க கொலை செய்த கொடூர மகன் : சிக்கிய 2 சடலங்கள்.. அதிர்ச்சி சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
4 March 2024, 10:25 am

சொத்தை எழுதித் தர மறுத்த தாய்.. துடிதுடிக்க கொலை செய்த கொடூர மகன் : சிக்கிய 2 சடலங்கள்.. அதிர்ச்சி சம்பவம்!

கர்நாடாகவில் தார்வார் நகர் ஒசஎல்லாப்புரா பகுதியை சேர்ந்த சாரதா பஜந்திரி என்பவருக்கு ராஜேந்திரா என்ற மகன் உள்ளார். சாரதாவின் கணவர் சமீபத்தில் உயிரிழந்தார்.

இதனால் இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், சாரதாவுக்கு விதவை உதவித்தொகை பணமும் வந்தது. மேலும் சில சொத்துக்களும் இருந்தது.

வேலைக்கு எங்கும் செல்லாத ராஜேந்திரா, தாயிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு பணத்தை பிடுங்கி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.மேலும் சொத்தை எழுதித் தர வேண்டும் என மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகனக்கு சொத்தை எழுதித் தர தாய் மறுத்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மகன், வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தாயை கண்மூடித்தனமாமக தாக்கினார்.

இதனால் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் தாய் உயிரிழந்தார். போலீஸ் விசாரணைக்கு பயந்து ராஜேந்திரா வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் 2 பேர் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!