நேரு என்ற பெயர் பெயருக்கு மட்டுமல்ல.. செயலுக்கும் தான் : அருங்காட்சியக பெயர் மாற்றம் குறித்து ராகுல் காந்தி பதிலடி!!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2023, 1:40 pm

தலைநகர் டெல்லி திருமூர்த்தி இல்லத்தில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (பி.எம்.எம்.எல்) என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.

இந்தப் பெயர் மாற்றம் கடந்த 14-ம் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பதாக, அருங்காட்சியகத்தின் செயற்குழு துணைத்தலைவர் கூறியிருந்தார்.

மத்திய அரசின் இந்த பெயர் மாற்றம் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அருங்காட்சியகம் பெயர் மாற்றம் என்பது நேருவின் மரபை மறுப்பதும், அவமதிப்பதுமே என அக்கட்சி சாடி வருகிறது.

இந்த நிலையில், நேரு அருங்காட்சியகம் பிரதமர் அருங்காட்சியகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

லடாக் செல்லும் வழியில், விமான நிலையத்தில் பேசிய அவர், ஜவகர்லால் நேரு அவர்கள் செய்த சிறப்பான பணிக்காகவே நினைவுகூரப்படுகிறாரே தவிர, வெறும் பெயரால் மட்டுமல்ல என்று பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், நேரு இந்திய மக்களின் இதயங்களில் வாழ்கிறார். பெயர்களை மாற்றுவது பழிவாங்கும் அரசியலின் ஒரு பகுதி என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 345

    0

    0