புதிய புல்லட் பைக்குக்கு பூஜை போட்ட இளைஞர் : புல்லட் பாம் போல வெடித்து சிதறிய ஷாக் காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2022, 12:58 pm

ஆந்திரா : புதிய புல்லட் வாகனத்திற்கு பூஜை செய்து கொண்டிருந்த நிலையில் தீப்பிடித்து வெடித்து சிதறியதல் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல் மண்டலம் கசாபுரத்தில் நெத்தி கண்டி ஆஞ்சநேயர் சுவாமி ஆலயத்தில் புதிதாக வாங்கப்பட்ட புல்லட் வாகனத்திற்கு பூஜை செய்து கொண்டிருந்தபோது வாகனத்தில் தீப்பற்றியது.

இதைத்தொடர்ந்து ஆலயத்திற்கு எதிரே உள்ள சாலையில் வாகனத்தை நிறுத்தி தீயை அணைக்க முயன்ற போது திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் பயத்தில் சிதறி ஓடினர்.

இதில் வாகனம் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?