வாடகைக்கு வீடு பார்ப்பதாக கூறி அடுத்தவர் வீட்டில் உல்லாசம் : உரிமையாளரிடம் சிக்கிய காதல் ஜோடி தலைதெறிக்க ஓட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan3 May 2022, 7:26 pm
தெலுங்கானா : வாடகைக்கு வீடு பார்க்க சென்று அடுத்தவர் வீட்டில் ரொமான்ஸ் செய்த காதல் ஜோடி. வீட்டின் உரிமையாளர் பார்த்துவிட்டதால் தலைதெறிக்க ஓட்டம் பிடித்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
ஹைதராபாத் எஸ். ஆர். நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு இளம் ஜோடி ஒன்று சென்றது. அங்கு சென்று அந்த இளம் காதல் ஜோடி தங்களுக்கு வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்டனர்.
இரண்டாவது தளத்தில் வீடு காலியாக உள்ளது, தேவையென்றால் சென்று பார்த்து வாருங்கள் என்று அந்த வீட்டின் உரிமையாளரான பெண் சாவியை கொடுத்து அனுப்பி வைத்தார்.
நீண்ட நேரமாகியும் அந்த இளம் ஜோடி திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர் சென்று பார்த்தபோது அந்த இளம் ஜோடி வீட்டுக்குள் சல்லாபத்தில் ஈடுபட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.
எதிர்பாராமல் அங்கு வந்த வீட்டு உரிமையாளர் தங்களை பார்த்து விட்டதால் அந்த இளம் ஜோடி அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது.