அடுத்த விக்கெட் காலி… I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி : அதிர்ச்சியில் காங்கிரஸ்!
Author: Udayachandran RadhaKrishnan15 February 2024, 4:51 pm
அடுத்த விக்கெட் காலி… I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி : அதிர்ச்சியில் காங்கிரஸ்!
தொகுதி பங்கீட்டில் உடன்பாடு இல்லை, அதிருப்தி, கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து இந்தியா கூட்டணியை விட்டு விலகுவது, தனித்து போட்டி என அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த மாதம், இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்குவங்கத்தில் தனித்துதான் போட்டியிடும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.
இதையடுத்து, பஞ்சாபில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்தது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு அடுத்துதான் இந்தியா கூட்டணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது.
ஏனென்றால், இந்தியா கூட்டணி உருவாக முக்கிய பங்காற்றிய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், அதிருப்தி காரணமாக அந்த கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்து முதல்வரானார்.
இது, இந்தியா கூட்டணியில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதுபோன்று, தொடர்ந்து இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பாஜகவுடன் கைகோர்ப்பது அல்லது தனித்து போட்டி என்ற தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
இந்த வரிசையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் உள்ள 5 தொகுதிகளிலும் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். மம்தா, கெஜ்ரிவாலை தொடர்ந்து தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் தனித்து போட்டிவிடுவதாக அறிவித்துள்ளார்.