பெண் அமைச்சரிடம், ‘கல்யாணம் பண்ணி வையுங்க’ என கேட்ட முதியவர் : பதிலடி கொடுத்த அமைச்சர்.. அரசு நிகழ்ச்சியில் ”சிரிப்பலை”!!
Author: Udayachandran RadhaKrishnan17 May 2022, 11:36 pm
ஆந்திரா : முதியோர் உதவித்தொகை வருகிறதா என கேட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்கே ரோஜாவிக்கு முதியோர் உதவித்தொகை வருகிறது. என்னை பார்த்துக் கொள்ள யாரும் இல்லை எனவே திருமணம் செய்து வையுங்கள் என கோரிக்கை விடுத்த முதியவர்ரால் சிரிப்பலை ஏற்பட்டது.
ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அடுத்து வரும் தேர்தலை முன்னிட்டு அனைத்து எம்எல்ஏக்களும் அவரவர்களுடைய சட்டமன்ற தொகுதியில் “கடப கடப்பகி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்” என்ற நிகழ்ச்சி வாயிலாக மக்கள் குறைகளை நேரடியாக சென்று கேட்டு அறிய வேண்டும் என உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து ஆந்திரா மாநிலத்திலுள்ள அனைத்து எம்எல்ஏக்களும் தங்களுடைய சட்டமன்றத் தொகுதியில் வீடு வீடாகச் சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்கே ரோஜா தனது சட்ட மன்ற தொகுதியான நகரி சட்டமன்றத் தொகுதியில் வீடு வீடாகச் சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது முதியவர் ஒருவரிடம் தங்களுக்கு முதியோர் உதவித்தொகை வருகிறதா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த முதியவர் முதியோர் உதவி தொகை வருகிறது. ஆனால் என்னை பார்த்துக் கொள்வதற்கு யாருமில்லை எனவே திருமணம் செய்து வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர் ஆர்.கே ரோஜா குபீரென சிரித்து விட்டார். அரசால் உதவித் தொகை மட்டுமே வழங்க முடியும் திருமணம் எல்லாம் செய்து வைக்க இயலாது என சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
இந்த சம்பவம் அங்கு கூடியிருந்தவர்கள் இடையே பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தியது.