மீண்டும் பயிற்சி பெண் மருத்துவருக்கு நேர்ந்த துயரம்.. திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் பரபரப்பு.. தீவிர போராட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2024, 10:58 am

திருப்பதி மலையில் சுற்றி தெரிந்து கொண்டிருந்த மன நோயாளி பங்காரு ராஜு. அவரை பிடித்த திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் ஊழியர்கள் சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெடிக்கல் சைன்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு பங்காரு ராஜு தேவஸ்தான விஜிலன்ஸ் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் கீழ்சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று இரவு அவர் திடீரென்று பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் மீது தாக்குதலில் ஈடுபட்டார்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் பங்காரு ராஜுவை பிடித்து கொண்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பயிற்சி மருத்துவர்கள் அவசர சிகிச்சை உள்ளிட்ட அனைத்து விதமான சிகிச்சைகளையும் நிறுத்தி திடீர் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் காரணமாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் நிலை சிக்கலாக மாறியது.

தங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக ஒப்புக்கொண்டால் மட்டுமே நாங்கள் பணியில் தொடர்வோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருவத்தவர்கள் தெரிவித்தனர்.

அங்கு விரைந்து சென்ற தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் பேசி பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இதனை தொடர்ந்து இரவு 11 மணி அளவில் போராட்டத்தை கைவிட்ட பயிற்சி மருத்துவர்கள் பணிக்கு திரும்பினர்.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!