‘தத்தா’க்கு பதில் ‘குத்தா’ : ரேஷன் கார்டில் மாறிய பெயர்.. அதிகாரிகளிடம் தவறை சுட்டிக்காட்ட நாயை போல குரைத்த நபர்.. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2022, 8:33 pm

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கு நடந்த ஒரு அதிர்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேற்கு வங்க மாநலிம் பங்குரா மாவட்டத்தை சேர்ந்த 40 வயது சேர்ந்த தத்தா என்ற நபர், தனது ரேஷன் கார்டில் தத்தா என்பதற்கு பதிலாக குத்தா என மாற்றி அச்சிடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

குத்தா என்றால் நாய் என்ற அர்த்தம் உள்ளது என்பதால், தவறு செய்த அதிகாரிகளிடம் முறையிட சென்றுள்ளார். மேலும் நாய் போலவே குரைத்துக் காட்டி அவர்களின் தவறை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் அதிகாரிகளோ, எப்படி தப்பிப்பது என காருக்குள் இருந்தாவாறே எதையும் சொல்லாமல், எஸ்கேப் ஆன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!