மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர்.. காப்பாற்ற சென்றவரும் சிக்கியதால் ஷாக்.. வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
1 செப்டம்பர் 2024, 2:27 மணி
flood
Quick Share

ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள கிருஷ்ணா, குண்டூர், விஜயவாடா,கம்மம் சூர்யா பேட்டை ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக இரண்டு மாநிலங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கம்மம், சூர்யா பேட்டை ஆகிய தெலுங்கானா மாவட்டங்களில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு போலீசார் போக்குவரத்தை வேறு பாதைகளில் திருப்பி விட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக கிருஷ்ணா, குண்டூர் ஆகிய ஆந்திரா மாவட்டங்களில் வீடுகள் இடிந்து 10 பேர் மரணம் அடைந்து விட்டனர்.

இடுபாடுகளில் சிக்கி மேலும் சிலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மழை வெள்ளத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்டு மேலும் சிலரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

இன்று ஆந்திரா தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

எனவே இரண்டு மாநிலங்களிலும் அதிகாரிகள், மீட்பு குழுவினர் ஆகியோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அரசு அமைத்திருக்கும் முகாம்களுக்கு சென்று தங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

  • விஜய் சொன்னது சரிதான்.. ஜெயக்குமார் போடும் கணக்கு!
  • Views: - 384

    0

    0