முதலமைச்சர் படம் ஒட்டிய ஸ்டிக்கரை கிழித்த செல்லப்பிராணி : நாய் மீது ஆக்ஷன் எடுக்க ஆளுங்கட்சி அளித்த புகாரால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
13 April 2023, 1:49 pm

முதலமைச்சர் படம் ஒட்டிய ஸ்டிக்கரை கிழித்த செல்லப்பிராணி : நாய் மீது ஆக்ஷன் எடுக்க ஆளுங்கட்சி அளித்த புகாரால் பரபரப்பு!!

ஆந்திர மாநிலத்தில் ஆளுங்க கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ‘மா நம்மகம் நூவே ஜெகன்’ ( எங்கள் நம்பிக்கை நீங்களே ஜெகன்) என்று ஜெகன் மோகன் ரெட்டி படத்துடன் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்களை வீடுகள், கடைகள் ஆகியவற்றில் ஒட்டி வருகிறது.

ஆளுங்கட்சியின் இந்த ஸ்டிக்கர் அரசியலுக்கு ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய எதிர்கட்சிகளும் பதிலடியாக ஸ்டிக்கர் ஒட்ட முடிவு செய்துள்ளன.

இந்த நிலையில் ஸ்ரீகாகுளம் நகரில் சுவற்றில் ஒட்டப்பட்டு இருந்த ஸ்டிக்கர் ஒன்றை ஒரு நாய் சுவற்றில் இருந்து கிழித்து எடுத்து சென்ற சம்பவத்தை வீடியோ எடுத்த சிலர் அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். அந்த காட்சி வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் விஜயவாடாவில் உள்ள ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி பெண் தொண்டர்கள் அங்குள்ள காவல் நிலையம் ஒன்றில் ஜெகன்மோகன் ரெட்டி படத்துடன் கூடிய ஸ்டிக்கரை சுவற்றில் இருந்து கிழித்து எடுத்து சென்ற நாய் மீதும் அந்த நாயின் அடையாளம் தெரியாத உரிமையாளர் மீதும் புகார் அளித்துள்ளனர்.

தங்கள் புகார் மீது வழக்குப்பதிவு செய்து நாயையும், நாயின் உரிமையாளரையும் கைது செய்ய வேண்டும் அவர் என்று அவர்கள் கூறுகின்றனர்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!