சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்க சென்ற போலீஸ்.. டிராக்டரை ஏற்றி கொலை செய்த கும்பல் : அதிர்ச்சி சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
5 May 2024, 1:57 pm

சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்க சென்ற போலீஸ்.. டிராக்டரை ஏற்றி கொலை செய்த கும்பல் : அதிர்ச்சி சம்பவம்!

ம.பி., மாநிலம் ஷெதோல் பகுதியில் ஆற்றில் டிராக்டர் மூலம் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உதவி சப் இன்ஸ்பெக்டர் மகேந்திர பக்ரி என்பவர் இரண்டு போலீசாருடன் சென்று தடுக்க முயன்றார். அப்போது, மகேந்திர பக்ரி மீது, மணல் கடத்தியவர்கள் டிராக்டரை ஏற்றினர்.

இதில் மகேந்திர பக்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவர் காயமின்றி உயிர் தப்பினர். அவர்கள் அளித்த தகவல்படி, உயிரிழந்த போலீசின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், டிரைவர் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான டிராக்டரின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 200

    0

    0