ஆட்சியமைக்க அழைத்த குடியரசுத் தலைவர்.. 3வது முறையாக பிரதமராக பதவியேற்கும் மோடி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2024, 7:16 pm

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களைக் கைப்பற்றியது. எனவே மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. இதற்கிடையே, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் சமீபத்தில் அவரது இல்லத்தில் நடந்தது.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நரேந்திர மோடி, ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்து அளித்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, காபந்து பிரதமராக தொடரும்படி கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், பாராளுமன்றத்தின் மைய அரங்கில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பாராளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்து எம்.பி.க்களும் ஆதரவு அளித்தனர்.

மேலும் படிக்க: தார்மீக வெற்றி காங்கிரஸ்க்குத்தான்.. அடக்கமாக இருக்க பாஜகவுக்கு பாடம் கொடுத்த மக்கள் : ப.சிதம்பரம் விமர்சனம்!

இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்த மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.க்களின் ஆதரவு கடிதத்தை அளித்ததுடன் 3வது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!