மொரீஷியஸ் பிரதமர் இன்று இந்தியா வருகை: குஜராத், வாரணாசி பகுதிகளில் சுற்றுப்பயணம்..!!
Author: Rajesh17 April 2022, 8:40 am
புதுடெல்லி: மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் இன்று 8 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார்.
மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் இந்தியாவில் 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக இன்று அவர் இந்தியாவிற்கு வருகை தருகிறார்.
அவருடன் அவரது மனைவி கோபிதா ஜுக்நாத் உடன் வருகிறார். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா-மொரீஷியஸ் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் விதமாக அந்நாட்டின் பிரதமர் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார்.
இந்தியாவில் அவர் டெல்லி, குஜராத், வாரணாசி உள்ளிட்ட இடங்களிலுக்குச் செல்ல இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.