உண்மையான சிவசேனா ஏக்நாத் ஷிண்டே அணி தான்.. அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம் : உத்தவ் ஷாக்!!
Author: Udayachandran RadhaKrishnan18 February 2023, 12:33 pm
மகாராஷ்டிராவில் கடந்த 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தனிப்பெரும் கட்சியாக பாஜக 105 இடங்களில் வெற்றி பெற்றது.
இருப்பினும் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சிவசேனா காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது.
மகாவிகாஷ் அகாடி என்ற பெயரில் அமைந்த இந்த கூட்டணி ஆட்சியில் முதல்வராக சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே இருந்தார்.
இந்த கூட்டணி ஆட்சி இரண்டரை ஆண்டுகள் நடந்தது. கடந்த ஆண்டு மத்தியில் கூட்டணி ஆட்சிக்கு எதிராக சிவசேனாவின் 40 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர்.
இந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணி திரண்டனர். இதனால் உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ந்தது. ஏக்நாத் ஷிண்டே அணியினர் பாஜகவுடன் கைகோர்த்து ஆட்சியை பிடித்தனர்
ஏக்நாத் ஷிண்டே அணியினர் பாஜகவுடன் கைகோர்த்து ஆட்சியை பிடித்தனர். ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார்.
இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா கட்சி மற்றும் சின்னத்துக்கு உரிமை கோரியது. கடந்த நவம்பர் மாதம் அந்தேரி கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் இருஅணியினரும் கட்சி பெயர் மற்றும் சின்னத்துக்கு உரிமை கோரிய நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சி பெயரையும், வில் அம்பு சின்னத்தையும் முடக்கியது
இந்நிலையில் தான் நேற்று தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டது. அதாவது உண்மையான சிவசேனா என்பது மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி தான் என அங்கீகரித்தது. மேலும் சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டேவிடம் வழங்கப்படும் என அறிவித்தது.
0
0