எது நடந்தாலும் மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி : தமிழகத்திற்கு எதிராக கர்நாடக முதலமைச்சர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2022, 8:25 pm

தமிழக அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை தீர்மானத்திற்கு எதிராக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார். எது நடந்தாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக உறுதியாக உள்ளது.

அதேபோல மேகதாதுவில் அணை கட்டவிடாமல் எப்படியும் தடுப்போம் என தமிழக அரசும் உறுதியாக இருக்கிறது. இந்த சமயத்தில், மேகதாது அணைக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

காவிரியில் உள்ள உபரி நீரை பயன்படுத்த கர்நாடகாவிற்கு உரிமை இருப்பதாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனிடையே, கர்நாடக மாநிலம் கனகபுரா அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மேகதாது அணை ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Ajithkumar Vidaamuyarchi box office in Bihar பீகாரில் மாஸ் காட்டும் விடாமுயற்சி.. தவிடுபொடியாகும் முந்தைய சாதனைகள்!