திடீரென 100 அடி தூரம் ரெண்டாக பிளந்த சாலை.. பள்ளத்தில் சரிந்து விழுந்த வாகனங்கள், சாலையோர கடைகள் : பரபரப்பு காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
23 December 2022, 7:10 pm

ஹைதராபாத்தில் திடீரென்று உடைந்து விழுந்த பாதாள சாக்கடையால் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், வாகனங்கள், சாலையோர கடைகள் சேதமாகின.

ஹைதராபாத்தில் உள்ள கோஷ் மஹால் பகுதியில் அமைந்திருக்கும் பாதாள சாக்கடை மீது பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி செல்வது வழக்கம்.

இது தவிர சாக்கடை மீது போடப்பட்டிருக்கும் கான்கிரீட் மீது சிறு வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் ஆகியோர் தங்கள் வாகனங்களை நிறுத்தி பழங்கள், காய்கறிகள், பொம்மைகள் ஆகியவற்றையும் விற்பனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் பாதாள சாக்கடை திடீரென்று சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு உடைந்து நொறுங்கியது. இதனால் அதன் மீது நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் ஆகியவை பாதாள சாக்கடைக்குள் விழுந்து சேதமடைந்தன.

இந்த சம்பவத்தில் ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை ஆகையால் பொருட்களை வாங்க ஏராளமானோர் கோஷ்மஹால் பகுதிக்கு வந்திருந்தனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தி பாதாள சாக்கடைக்குள் விழுந்த வாகனங்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

https://vimeo.com/783927948

மேலும் இடிபாடுகளுக்கு இடையே யாராவது சிக்கி கொண்டிருக்கிறார்களா என்று கண்டுபிடிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 395

    0

    0