அமைச்சருக்கு ஷூ மாட்டிவிடும் பாதுகாவலர்… வைரலாகும் ஷாக் வீடியோ : அதிர்ந்து போன இண்டியா கூட்டணி!!!

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2023, 8:00 pm

அமைச்சருக்கு ஷூ மாட்டிவிடும் பாதுகாவலர்… வைரலாகும் ஷாக் வீடியோ : அதிர்ந்து போன திமுக!!!

கர்நாடக அமைச்சருக்கு அவரின் பாதுகாவலர் ஷூ (காலணி) மாட்டிவிடும் விடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் ஹெச்.சி.மகாதேவப்பா புதன்கிழமை அரசு விடுதியில் ஆய்வு மேற்கொண்டபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதியின் சமையலறையில் இருந்து அமைச்சர் மகாதேவப்பா வெளியில் வரும்போது, அவரின் பாதுகாவலர் அவருக்கு காலணி அணிவித்து விடுகிறார். அப்போது சுற்றி உள்ளவர்களிடம் அமைச்சர் பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. பாஜகவுக்கு விமர்சனம் செய்ய இந்த வீடியோ தீனியாக அமைந்துள்ள நிலையில் இது இண்டியா கூட்டணியிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி