ஹைதராபாத்தில் நேற்று பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த திருமணமான பெண்ணை அவருடைய முன்னாள் காதலன் சையத் நசுரூதீன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பார்த்தபஸ்தியில் உள்ள ஹபீஸ் பாபா நகரில் உள்ள பரபரப்பான சாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 48 வயதுடைய சையத் நூர்பான் என்ற அந்த பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய சையத் நசுரூதீனை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. வீடியோவில் ஒரு ஆண், பர்தா அணிந்த பெண்ணை துரத்தி செல்வதையும், பின்னால் இருந்து நீண்ட கத்தியால் தாக்குவதையும் காணலாம்.
இதில், அவர் நிலைகுலைந்த பிறகும் நிற்காமல், மக்கள் திகிலுடன் பார்த்து கொண்டிருக்க, அவரைத் தொடர்ந்து கத்தியால் குத்துகிறார். அந்த வழியாகச் சென்றவர்களில் ஒருவர் அருகில் செல்ல முயன்றபோது, தாக்குதல் நடத்தியவர் அவர் மீது கத்தியைக் காட்டி, அவரை பின்வாங்கச் செய்தார். மக்கள் பலர் அதிர்ச்சி குலையாமல் அப்படியே உறைந்து நின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்
இந்த சம்பவம் தொடர்பாக கஞ்சன்பாக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆறு குழந்தைகளின் தாயான அவர் தனது அண்டை வீட்டில் வசித்து வரும் முன்னாள் காதலன் சையத் நசுரூதீனால் துன்புறுத்தப்படுவதாகவும்,அவர் சையத் நூர்பானை பின்தொடர்ந்து வந்ததாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து கடந்த ஆண்டு சையத் நசுரூதீன் மீது போலீசில் புகார் அளித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
நடுரோட்டில் படடப்பகலில் பெண் ஒருவரை குத்திச்சென்றது காண்போரை கதிகலங்கச் செய்தது. இந்த வீடியோ பார்த்த பலர் அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.