தெலுங்கானா : கல்லூரி மாணவி ஒருவரை பாம்பு இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை கடித்த சம்பவங்களில் 2 முறை உயிர் பிழைத்த அவர் மூன்றாவது முறையாக நேற்று மரணமடைந்தார்.
அடிலாபாத் மாவட்டத்தை சேர்ந்த பெட்டோட்டா கிராமத்தில் வசிப்பவர் சுபாஷ்.
அவருடைய ஒரே மகள் பிரானலி (வயது 18). அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலை பட்டம் வகுப்பு படித்து வருகிறார் பிரானலி.
கடந்தாண்டு செப்டம்பர் மாதமும் இந்த ஆண்டு ஜனவரி மாதமும் அவரை பாம்பு கடித்தது. தங்களுடைய ஒரே மகளை பாம்பு கடித்த நிலையில் சுமார் 5 லட்ச ரூபாய் செலவு செய்து அவரை பெற்றோர் உயிர் பிழைக்க வைத்தனர்.
ஆனால் இந்த முறை விதி வலியது என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவருடைய கல்லூரி பைக்குள் இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது.
பெற்றோர் உடனடியாக அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று உயிரிழந்தார். தங்களுடைய ஒரே மகள் தொடர் பாம்பு கடி காரணமாக மரணமடைந்தது அந்த குடும்பத்தினரிடையே அச்சத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
This website uses cookies.