மாமனாரின் கட்சியை வளைத்த மருமகன்.. ஷாக்கில் சரத் பவார் : INDIA கூட்டணிக்கு அடி மேல் அடி!!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2024, 8:19 pm

மாமனாரின் கட்சியை வளைத்த மருமகன்.. ஷாக்கில் சரத் பவார் : INDIA கூட்டணிக்கு அடி மேல் அடி!!

நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் சரத் பவார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் இருந்த சரத் பவார் பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்.

மகாராஷ்டிராவில் முக்கிய கட்சியாக இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் கடந்த ஆண்டு உள்கட்சி மோதல் வெடித்தது. சரத் பவாரின் மருமகன் அஜித் பவார், கட்சியில் குழப்பதை ஏற்படுத்தி உடைத்தார். மேலும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசில் இணைந்து துணை முதல்வரானார்.

இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சரத்பவாரும் அஜித் பவாரும் உரிமை கொண்டாடி வந்தனர். இருதரப்பிலும் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த தேர்தல் ஆணையம், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை அஜித்பவாருக்கு ஒதுக்கியுள்ளது. அஜித்பவாருக்கே அதிக ஆதரவு நிர்வாகிகள் இருப்பதால் அவருக்கே கடிகாரம் சின்னம் ஒதுக்கப்படுவதாகவும் சரத்பவார் தனக்கு விருப்பமான பெயரை தேர்வு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

இது சரத்பவாருக்கு பேரிடியாக அமைந்துள்ளது. ஒரு பக்கம் பாஜகவுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இண்டியா கூட்டணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி