பணியில் இருந்த ஆயுதப்படை காவலரிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்த மகன்.. முடிவில் நடந்த சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
2 June 2024, 6:23 pm

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பாக்கிய நகர் பகுதியில் வசிக்கும் ஆயுதப்படையில் கான்ஸ்டபிளாக பணி புரிந்து வருகிறார்.

தற்போது பிரசாத் பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேமித்து வைத்துள்ள குடோனில் பாதுகாப்பு பணியில் உள்ளார். இந்நிலையில் பிரசாத் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வீட்டில் சம்பளம் பணத்தை தருவதில்லை.

இதனால் பிரசாத்தின் மகன் சேஷக்குமார் பணியில் இருந்த தந்தையிடம் சென்று ஏடிஎம் கார்டு கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

இதனால் பொறுமை இழந்த ஏ.ஆர். கான்ஸ்டபிள் பிரசாத் தனது கையில் இருந்த துப்பாக்கியால் சேஷக்குமார் மார்பில் சுட்டார். உடனடியாக அருகில் இருந்த சக போலீசார் சேஷகுமாரை மீட்டு சிகிச்சைக்காக ஓங்கோல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார் ஏ.ஆர்.கான்ஸ்டபிள் பிரசாத்தை பிடித்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. சுமித் சுனில் ஆய்வு மேற்கொண்டு நடந்த விவரங்களை கேட்டறிந்தார். மதுபோதைக்கு அடிமையாகி பெற்ற மகனை பணியில் இருந்த காவலரே சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Enai Noki Paayum Thota controversy தனுஷ் இயக்கிய முதல் படம் பா.பாண்டி இல்லையா…உண்மையை உடைத்து பேசிய கெளதம் வாசுதேவ் மேனன்..!