ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தேதி திடீர் மாற்றம்… இதுக்காகத்தான் மாத்திருக்காங்க..!!

Author: Udayachandran RadhaKrishnan
11 October 2023, 7:51 pm

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தேதி திடீர் மாற்றம்… இதுக்காகத்தான் மாத்திருக்காங்க..!!

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவி காலம் இந்தாண்டுடன் முடிவடைகிறது.

இதனால், இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை கடந்த 9-ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

அதன்படி, மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மிசோரம் மாநிலத்தில் 8.52 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 1,276 வாக்குச்சாவடிகள் அமைத்து வாக்குப்பதிவு நடைபெறும்.

சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 கட்டங்களாக நவம்பர் 7 மற்றும் 17ம் தேர்தல் நடைபெறும். 20 தொகுதிகளுக்கு நவ.7ம் தேதியும், மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு நவ.17ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் 24,109 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு, 2.03 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 14ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு சட்டப்பேரவை தேர்தலுக்காக 64,532 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 5.06 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 30ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக 35,356 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு 3.17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

ராஜஸ்தானில் 200 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நவ.25-ஆம் ஏத்தி இந்த தேர்தல் நடைபெறும் என தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.

23ஆம் தேதி முகூர்த்த நாள் என்பதால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 51,756 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 5.25 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்த 5 மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 418

    0

    0