கடைசி வாய்ப்பையும் தட்டி விட்ட உச்சநீதிமன்றம்… சரணடைந்தார் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்!
Author: Udayachandran RadhaKrishnan2 June 2024, 7:13 pm
டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்த ஜாமின் நேற்று முடிவடைந்தது. இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆம் ஆத்மி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை. சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடுகிறேன். இந்த மாதிரியான சர்வாதிகாரத்தை நம் நாடு பொறுத்துக்கொள்ள முடியாது என்றார்.
முன்னதாக, மகாத்மா காந்தி நினைவிடத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மரியாதை செலுத்தினார். கெஜ்ரிவாலுடன் ஆம் ஆத்மி அமைச்சர்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர். இந்நிலையில், கெஜ்ரிவால் திகார் சிறையில் இன்று மாலை சரணடைந்தார்.