எம்எல்ஏ-வை வழிமறித்து ரூ.30 ஆயிரம் பாக்கியை கேட்ட டீக்கடைக்காரர் : இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2022, 3:25 pm

மத்தியபிரதேச முன்னாள் வருவாய்த்துறை மந்திரியான கரண் சிங் வர்மா, தற்போது இச்சாவர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக உள்ளார்.

இந்நிலையில் இவர் அண்மையில் சீஹோர் மாவட்டம் இச்சாவர் தொகுதிக்கு காரில் வந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த டீக்கடை உரிமையாளர் ஒருவர் காரை வழிமறித்தார்.

காரை டிரைவர் நிறுத்தியபோது, எம்எல்ஏவிடம் சென்ற டீக்கடை உரிமையாளர் 2018-ம்ஆண்டு முதல் டீக்கடையில் சாப்பிட்டுவிட்டு தராமல் சென்ற ரூ.30 ஆயிரம் பாக்கி பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டுள்ளார்.
சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக பணத்தைத் திருப்பித் தரமால் உள்ளதாகவும், அதை உடனடியாக தந்து உதவுமாறு அந்த டீக்கடை உரிமையாளர் கேட்டுள்ளார்.

தொகுதி மக்கள் எதிரே, இப்படி கடனைக் கேட்டதால் பாஜக எம்எல்ஏ கரண் சிங் வர்மா தர்மசங்கடத்துக்கு உள்ளானார். இதையடுத்து, விரைவில் அந்தக் கடனைத் திருப்பித் தருவதாக டீக்கடை உரிமையாளரிடம் கரண் சிங் வர்மா உறுதி அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த சீஹோர் மாவட்டம், மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் சொந்த மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!