உருவக்கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த உத்தரபிரதேச மாணவி… 10ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 April 2024, 11:15 am

உருவக்கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த உத்தரபிரதேச மாணவி… 10ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 600 மதிப்பெண்களுக்கு 591 மதிப்பெண் அதாவது 98.5% மதிப்பெண்கள் பெற்றார் மாணவி பிராச்சி நிகம். உ.பி. சீதாப்பூர் பால் வித்யா மந்திர் பள்ளியில் படித்தவர் பிராச்சி நிகாம்.

மேலும் படிக்க: சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.1ஆக பதிவு : சாலைகளி தஞ்சமடைந்த இன்தோனேசிய மக்கள்!

உ.பி. 10-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி பிராச்சி நிகம் போட்டோவை முன்வைத்து சமூக வலைதளங்களில் மிக கடுமையாக உருவகேலிக்குள்ளாக்கப்பட்டார்.

மாணவியின் முகத்தில் ஆண்களுக்கு போல் இருந்த அதிகமான முடியை குறிப்பிட்டுதான் இந்த உருவகேலிகள் முன்வைக்கப்பட்டன. பெண்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளின் ஒரு பகுதியாக ஆண்களுக்கு மீசை இருப்பது போல பெண்கள் சிலருக்கும் முடி வளர்வது உண்டு. குறிப்பாக கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை உள்ள பெண்களுக்கு இத்தகைய குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது என்கிற மருத்து உலகம்.

ஆனால் இந்த மருத்துவ காரணங்களை புறந்தள்ளிவிட்டு சமூக வலைதளங்களில் பிராச்சி நிகம் கடுமையாக கிண்டலடிக்கப்பட்டார். இந்த கிண்டல்களுக்கும் உருவகேலிகளுக்கும் தற்போது பிராச்சி நிகம் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிராச்சி நிகம் கூறியதாவது: நான் இன்ஜினியராக வேண்டும் என்பது என் விருப்பம். இதற்காக ஐஐடி-ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுத இருக்கிறேன். என்னை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்கின்றனர். இப்படி கிண்டல் செய்வது, ட்ரோல் செய்வதை மட்டுமே சிலர் முழுநேரமாகவும் செய்து வருகின்றனர்.

எனக்கு அப்படி அல்ல. எனக்கு வெற்றிதான் முக்கியம். என் உருவத்துக்காக என் ஆசிரியர்களோ சக மாணவர்களோ ஒரு போதும் கேலி செய்ததும் இல்லை. நானும் இதைப் பற்றி ஒருநாளும் கவலைப்பட்டதும் இல்லை. இப்போது சமூக வலைதளங்களில் படங்கள் பகிரப்பட்ட நிலையில் கிண்டல் செய்கின்றனர். சாணக்கியர் கூட இதைப் போல கிண்டல்களுக்குள்ளாக்கப்பட்டார்.

சாணக்கியரை உருவத்தை வைத்து கிண்டல் செய்திருக்கின்றனர். நான் இதை எல்லாம் பொருட்படுத்தவும் மாட்டேன். இவ்வாறு பிராச்சி நிகம் தெரிவித்துள்ளார்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!