கள்ளக்காதலுடன் எஸ்கேப் ஆன மனைவி… நண்பர்களுக்கு மதுவிருந்துடன் பிரியாணி சமைத்து ட்ரீட் வைத்து கொண்டாடிய கணவன்!!

கள்ளக்காதலுடன் எஸ்கேப் ஆன மனைவி… நண்பர்களுக்கு மதுவிருந்துடன் பிரியாணி சமைத்து ட்ரீட் வைத்து கொண்டாடிய கணவன்!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அடுத்த வடகரையை சேர்ந்தவர் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர். இவருக்கு திருமணமாகி விட்டது. கணவன், மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களது வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியுள்ளது.

வாலிபரின் மனைவிக்கு, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 2 பேரும் அடிக்கடி சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் வாலிபருக்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் இளம்பெண் தனது கள்ளக்காதலை தொடர்ந்தார்.இதனால் அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வாலிபர் வீட்டை விட்டு வெளியில் சென்றார்.பின்னர் மாலையில் வெளியில் வந்த போது வீட்டில் அவரது மனைவி இல்லை. அவர் தனது கள்ளக்காதலனுடன் ஓடி சென்றது தெரியவந்தது.

முதலில் மனைவி வேறு ஒருவருடன் சென்றதால் வாலிபருக்கு வருத்தம் இருந்துள்ளது. மேலும் மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளார்.ஆனால் அதில் இருந்து விடுபட்டு வெளியில் வர வேண்டும் என எண்ணிய வாலிபர், இதனை நாம் ஒருவிழாவாக கொண்டாடுவோம் என எண்ணி, தனது நண்பர்களை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அவரது அழைப்பின் பேரில் அவரது வீட்டிற்கு அவரது நண்பர்கள் உள்பட 250 பேர் வந்தனர். அவர்கள் அனைவருக்கும் மது வாங்கி கொடுத்து, பிரியாணி சமைத்து பரிமாறி உள்ளார்.

பின்னர் போதை தலைக்கேறிய நிலையில், அனைவரும் ஒன்று சேர்ந்து, பாடலை இசைக்க விட்டு, குத்தாட்டம் போட்டுள்ளனர். மேலும் அதனை வீடியோவும் எடுத்தனர். மனைவி வீட்டை விட்டு சென்றதை மது விருந்து வைத்து கொண்டாடிய வாலிபர் முதலில் தனது முகத்தை காட்ட சற்று தயங்கி உள்ளார். அதன்பின்னர் அவரும் இறங்கி தனது நண்பர்களுடன் பாடலின் இசைக்கேற்ப குத்தாட்டம் போட்டுள்ளார்.

பின்னர் அந்த காட்சிகளை அவரது நண்பர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த காட்சியானது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே வாலிபர் தினமும் குடித்து விட்டு மனைவிக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும், அதனாலேயே இளம்பெண் வேறு ஒருவரை காதலித்து, அவருடன் சென்றதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியானாலும் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதை மது விருந்து வைத்து கொண்டாடிய சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

லோகேஷ் கனகராஜ் எடுத்த திடீர் முடிவு! என்ன சார் கடைசில இப்படி பண்ணிட்டீங்களே?

ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…

6 minutes ago

பாஜகவுடன் கூட்டணி வைப்பதும், பாடையில் உட்காருவதும் ஒன்ணுதான் : பரபரப்பை கிளப்பிய திமுக பேச்சாளர்!

பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…

42 minutes ago

நண்பனின் தங்கைக்கு மோசமான மெசேஜ்.. வீட்டுக்கே சென்ற அத்துமீற முயன்ற VIRTUAL WARRIORS!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…

2 hours ago

ஓடும் ரயிலில் நடந்த கொடூரம்! பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாளவிகா மோகனன்? அடக்கடவுளே!

ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…

3 hours ago

கைமாறியது விஜய் டிவி… கோபிநாத், பிரியங்கா, மகாபா ஆனந்தை நீக்க முடிவு!

விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…

3 hours ago

டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி ஊழல்? இபிஎஸ் குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…

3 hours ago

This website uses cookies.