கணவரை காதலித்த பெண்… இருவருக்கும் திருமணம் செய்து வைத்த மனைவி : இந்த காலத்துல இப்படியா?

Author: Udayachandran RadhaKrishnan
29 August 2024, 2:13 pm

தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் சின்னகூடுரு மண்டலம் உக்கம்பள்ளி கிராமத்தை சேர்ந்த தாசரி சுரேஷுக்கும் – சரிதாவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சுரேஷை அதே ஊரை சேர்ந்த மாமன் மகளான சந்தியா காதலித்து வந்துள்ளார்.

மாற்றுதிறனாளியான சந்தியா இதுகுறித்து சரிதாவுக்கு கூறினார். இதனையடுத்து கணவர் சுரேஷ்க்கும் – சந்தியாவுக்கும் கோயிலில் உறவினர்கள் முன்னிலையில் மனைவி திருமணம் செய்து வைத்தார்.

இதுகுறித்து சரிதா கூறுகையில் மாற்று திறனாளியான சந்தியா தனது கணவரை விரும்புவதாகவும், அதனால் மனிதாபிமானத்துடன் இருவரையும் திருமணம் செய்து வைத்தேன்.

குறிப்பாக மாற்றுதிறனாளியான சந்தியாவை நல்லப்படியாக பார்த்து கொள்ளவே இந்த கணவருக்கு திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வருவதாக கூறினார்.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?