பாஜக எம்எல்ஏவுக்கு வீடியோ கால் செய்து நிர்வாணமாக நின்ற பெண் : விசாரணையில் பகீர்… பரபரப்பு புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2022, 10:38 am

பா.ஜ.க எம்.எல்.ஏ வுக்கு வாட்ஸ்அப்பில் நிர்வாண வீடியோ கால் செய்த அடையாளம் தெரியாத பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில், பா.ஜ.க மூத்த எம்.எல்.ஏ ஜி.எச்.திப்பாரெட்டி, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தனக்கு வாட்ஸ்அப்பில் நிர்வாண வீடியோ கால் செய்ததாக போலீசில் புகார் அளித்து உள்ளார்.

இதுகுறித்து திப்பாரெட்டி தன்னுடைய புகாரில், அக்டோபர் 31-ம் தேதியன்று அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வாட்ஸ்அப்பில் தனக்கு நிர்வாணமாக வீடியோ கால் செய்ததாகவும், பின்னர் அந்த நபர் ஒரு மோசமான வீடியோவை வாட்ஸ்அப்பில் பகிர்ந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் இதுதொடர்பாக, அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திப்பாரெட்டி கூறியிருக்கிறார்.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திப்பாரெட்டி, “முதலில் வாட்ஸ்அப்பில் எனக்கு அழைப்பு வந்தபோது, என்னுடைய கேள்விகளுக்கு அவர் ஏதும் பதிலளிக்கவில்லை.

சில நிமிடங்களுக்குப் பிறகு மற்றொரு அழைப்பு வந்தது, அதில் அந்த பெண் தன் ஆடைகளைக் கழற்ற ஆரம்பித்தார். அப்போது அழைப்பைத் துண்டித்து போனை ஓரமாக வைத்துவிட்டேன் .

மீண்டும், அரை நிமிடம் கழித்து எனக்கு அழைப்பு வந்தது. போனை என் மனைவியிடம் கொடுத்தேன், அவர் அந்த எண்ணை துண்டித்து பிளாக் செய்தார். அதன்பிறகு காவல்துறை ஆய்வாளரின் ஆலோசனையின் பேரில், சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்தேன், எனக் கூறினார்.

  • Anirudh marriage news அனிருத்துக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகல..கண் கலங்கிய அம்மா..மனம் திறந்து பேட்டி.!
  • Close menu