போதையில் காவலரை விரட்டி விரட்டி மூக்கை உடைத்த இளைஞர்.. தடுக்க முடியாமல் திணறிய சக போலீஸ்..!!
Author: Udayachandran RadhaKrishnan2 August 2024, 1:23 pm
தவறு செய்தவர்களை போலீசார் தான் தாக்குவார்கள். ஆனால் இங்கு தவறு செய்த போதை ஆசாமி போலீசாரை தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
விசாகப்பட்டினம் ஆதர்ஷ் நகரை சேர்ந்த மகாலட்சுமி, தனது கணவர் வினய்குமார் குடிபோதையில் தன்னை தாக்குவதாக 100க்கு போன் செய்து புகார் கொடுத்தார்.
புகாரை தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக வினய்குமார் வீட்டுக்கு மூன்று போலீஸார் சென்றனர். மது போதையில் இருந்த வினய் குமார் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி அவர்களை தாக்க முயன்றார்.
அங்கு சென்ற மூன்று போலீசாரில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளுக்கும் வினைக்குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அவர் மீது ஆத்திரமடைந்த வினய்குமார்,அவரை தாக்க முயன்றார்.
மற்ற இரண்டு போலீஸ்காரர்கள் அவரை பிடித்துக் கொண்ட நிலையில் கூட அந்த போலீஸ் கான்ஸ்டபிள் மீது பாய்ந்து தாக்க தீவிர முயற்சியில் எடுத்தார் வினைக்குமார்.
ஆனால் கராத்தே போட்டியில் போஸ் கொடுப்பது போல் போஸ் கொடுத்த அந்த போலீஸ்காண்ஸ்டபில் வினய்குமார் தாக்கி விடுவாரோ என்ற அச்சத்தில் பின்வாங்கி கொண்டிருந்தார்.
ஆனால் இரண்டு போலீஸ்காரர்களின் பிடியிலிருந்து தப்பிய வினைக்குமார் கராத்தே போஸ் கொடுத்த போலீஸ்காண்ஸ்டபில் முகத்தில் கும்மாங்குத்து விட்டார்.
அவர் விட்ட குத்து காரணமாக போலீஸ் காண்ஸ்டபிளின் ஒரு கண் பகுதி வீக்கம் அடைந்தது.
தீவிர முயற்சி எடுத்து அவரை பிடித்து கைது செய்து போலீசார் வினய்குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்குப்பதிவு மேற்கொண்டு கைது செய்து தங்கள் பாணியில் கவனித்து வருகின்றனர்.