வீட்டுக்குள் புகுந்து இளம்பெண்ணை துடிதுடிக்க கொலை செய்த இளைஞர் : காதலிக்க மறுத்ததால் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2022, 7:14 pm

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பானூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர் மனைவி பிந்து. இவர்களின் மகள் விஷ்ணு பிரியா (23) தனியார் ஆஸ்பத்திரியில் நர்ஸ்சாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் வேலை எதுவும் இல்லாமல் சுற்றி திரிந்த சியாம்ஜித் அவரை ஒருதலையாக காதலித்துள்ளார். தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் விஷ்ணு பிரியா நேற்று வீட்டில் இருப்பதை அறிந்து கொண்ட சியாம் ஜித் அவரது வீட்டிற்கு வந்து உள்ளார். வீட்டில் தனிமையில் இருப்பதை கண்டு கொண்ட சியாம்ஜித் வழக்கம்போல் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கோபத்துடன் கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சியாம்ஜித் சுத்தியலால் தலையில் முரட்டுத்தனமாக தாக்கியுள்ளார். அதில் அந்த இளம்பெண் மயங்கி விழுந்த நிலையில் தன் கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இதிலும் வெறி அடங்காமல் கால்கள் இரண்டையும் கத்தியால் வெட்டி உள்ளார். பின்னர் அவர் உயிரிழந்ததை உறுதி செய்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த தன் மகளை கண்ட தாயார் அதிர்ச்சியில் அலறியுள்ளார்.

இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்நிலையில் இளம்பெண்னின் செல்போனை போலீசார் சோதனை செய்தபோது கொலை நடப்பதற்கு மூன்று நிமிடங்களுக்கு முன்பு கடைசியாக அவர் ஒருவருக்கு போன் செய்து இருப்பது தெரிய வந்தது.

அந்த போன் நம்பரை தொடர்பு கொண்டு போலீசார் பேசிய போது அந்த நபர் விஷ்ணு பிரியா தன்னை தொடர்பு கொண்டு தனது வீட்டுக்கு சியாம்ஜித் வந்துள்ளதாக கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார் என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து 3 மணி நேரத்தில் போலீசார் சியாம்ஜித்தை மடக்கி பிடித்தனர். போலீசிடம் பிடிபட்ட சியாம் ஜித் காதலிக்க மறுத்ததால் கோபம் கொண்டு விஷ்ணு பிரியாவை கொலை செய்ததாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

அதன் பேரில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!