படுத்த படுக்கையாக இருந்த 87 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை: சிசிடிவி வீடியோவால் சிக்கிய 30 வயது இளைஞர்..!!

Author: Rajesh
15 February 2022, 5:32 pm

டெல்லி: படுக்கையிலிருந்த 87 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் திலக் நகர் பகுதியில் வசித்து வரும் மூதாட்டி ஒருவர் உடல்நலம் குன்றிய நிலையில் படுத்த படுக்கையாக வசித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் மூதாட்டியின் மகள் வெளியே சென்ற நிலையில், வீடு திரும்பிய போது மூதாட்டியின் மூக்கில் ரத்தம் வழிந்துள்ளது.

மேலும் வீட்டிலிருந்த செல்போன் காணாமல் போனதும் தெரியவந்திருக்கிறது. உடனே அக்கம்பக்கத்திலிருந்த உறவினர்களை அழைத்ததோடு போலீசுக்கும் தகவல் கொடுத்திருக்கிறார். அப்போது யாரோ தெரியாத நபர் வீட்டிற்குள் சென்றதை கவனித்ததாக உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சிசிடிவி காட்சிகளை பரிசோதித்ததில், வீட்டிற்குள் இளைஞர் ஒருவர் சென்று வரும் காட்சிகள் பதிவாகியிருந்தது. துப்புரவுத்தொழில் செய்துவரும் அந்த இளைஞர் மூதாட்டி வசித்துவந்த பகுதியில் துப்புரவுப்பணிகளை செய்துவந்துள்ளார். மேலும் அவர் படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன் அங்கிருந்த செல்போனையும் திருடிச்சென்றதும் தெரியவந்திருக்கிறது.

தகவலறிந்த 16 மணிநேரத்தில் தலைமறைவாக இளைஞரை போலீசார் தேடிக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டியை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1738

    0

    0