திருப்பதி கோவிலில் ரூ.2 லட்சம் பணம் திருட்டு : ஊழியர் தூங்கியதால் விபரீதம்.. ஷாக் சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan24 January 2023, 5:48 pm
திருப்பதி மலையில் உள்ள லட்டு விநியோக மையத்தில் நேற்று நள்ளிரவு இரண்டு லட்ச ரூபாய் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள லட்டு விநியோக மையத்தில் 50க்கும் மேற்பட்ட கவுண்டர்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நிலையில் நேற்று நள்ளிரவிற்கு பின் 36 வது நம்பர் கவுண்டரில் லட்டு விநியோக பணியில் இருந்த நபர் விநியோகத்தை நிறுத்திவிட்டு தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது கவுண்டருக்குள் புகுந்த மர்ம நபர் அங்கு லட்டு விற்பனை செய்தது மூலம் கிடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டு லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்று விட்டார்.
இன்று காலை சுமார் 5 மணி அளவில் தூங்கி எழுந்து பார்த்தபோது பணத்தை காணவில்லை. இது தொடர்பாக தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினரிடம் அவர் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் அங்கு வந்து சேர்ந்த விஜிலெஸ் துறையினர் கவுண்டரில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது திருட்டு போனது உறுதி செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் திருமலை காவல் நிலையத்தில் விஜிலன்ஸ் அதிகாரிகள் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி கேமரா பதிவு காட்சிகள் அடிப்படையில் கவுண்டரில் 2 லட்ச ரூபாய் திருடி சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.