அரசுக்கும் இளைஞர்களுக்கும் இடையே வலிமையான உறவு உள்ளது : கேரளாவில் பிரதமர் மோடி பேச்சு!!
Author: Udayachandran RadhaKrishnan24 April 2023, 9:16 pm
இன்று மாலை கேரளாவின் கொச்சி நகருக்கு அவர் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் கேரளாவின் பாரம்பரிய முறைப்படி வேட்டி அணிந்து சென்றார். கேரளாவின் திவாரா பகுதியில் நடந்த இளைஞர் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, பா.ஜ.க. மற்றும் இந்திய இளைஞர்கள் இன்றைய தினம் ஒரே மாதிரியான அலைநீளம் மற்றும் பார்வையை பகிர்ந்து கொள்கின்றனர். நாங்கள் சீர்திருத்தங்களை கொண்டு வருகிறோம். இளைஞர்கள் முடிவுகளை கொண்டு வருகின்றனர்.
அரசுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும் இடையே வலிமையான ஓர் உறவு உள்ளது. இந்த சகாப்தம் இளைஞர் தலைமையிலான வளர்ச்சிக்கான சகாப்தம் என்று பா.ஜ.க. உருவாக்கி உள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
ஒவ்வொரு பிரிவிலும் முந்தின அரசு ஊழல்களை செய்திருந்தது என கூறிய அவர், மற்றொரு புறம் ஒவ்வொரு பிரிவிலும் பா.ஜ.க. அரசு வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. ஆத்மநிர்பார் பிரசாரத்தின் வழியே, இளைஞர்களுக்கு போதிய சந்தர்ப்பங்கள் கிடைத்து உள்ளன என்று அவர் பேசியுள்ளார்.