பாட்டியிடம் இருந்து நகைகளை வழிப்பறி செய்த கொள்ளையர்கள் : துணிவுடன் போராடிய பேத்தி.. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
12 December 2022, 4:23 pm

உத்தரபிரதேசம் மீரட் மைதா மொகல்லாவில் வசிப்பவர் வருண். இவரது தாயார் தனது பேத்தி ரியா அகர்வாலுடன் லால் குர்தியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார்.

வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் பைக்கில் வந்த மர்மநபர்கள் இருவர் பாட்டியின் காதில் இருந்த கம்மலை பறித்து கொண்டு ஓட முயன்றனர்.​​

மர்மநபர்களின் பைக்கை ரியா பிடித்து சாலையில் தள்ளிவிட்டார். பின்னர் திருடனின் சட்டையை பிடித்து சண்டை போட்டு உள்ளார். துணிச்சலுடன் போராடி குற்றவாளிகளிடமிருந்து ஒரு கம்மலையும் திரும்பப் பெற்றார்.

மர்மநபர்கள் ரியாவை தள்ளிவிட்டு ஓடிவிட்டனர். இந்த காட்சிகள் தெருவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ரியா மர்ம நபர்களுடன் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து ரியாவிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விரைவில் குற்றவாளிகளை பிடிப்பதாக உறுதியளித்து உள்ளனர். பின்னர் நகரின் புச்டி சாலை அருகே போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி மர்ம நபர்களை கைது செய்தனர்.

  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!