ஒரே ஆண்டில் 1150 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை : சாதனை படைத்த பிரபல கோவில் நிர்வாகத்தின் மருத்துவமனை!!!
Author: Babu Lakshmanan27 February 2023, 9:45 pm
குழந்தைகள் இருதய நல மருத்துவமனை புதிய சாதனை படைத்துள்ளது.
ஸ்ரீ பத்மாவதி ஹிருதயாலயா என்ற பெயரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதியில் குழந்தைகள் இதய நல மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறது. 15 மாதங்களுக்கு முன் துவக்கப்பட்ட அந்த மருத்துவமனையில் இதுவரை 1150 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு குழந்தைகளுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேவஸ்தானத்தின் குழந்தைகள் இருதய நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து வரும் மருத்துவமனை இயக்குனர் ஸ்ரீகாந்த், மருத்துவர்கள் கணபதி, செளமியா மற்றும் குழுவினரை தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்து இன்று வாழ்த்து தெரிவித்தார்.