திருப்பதி கோவிலுக்கு போகும் பிளானா..? 4வது புரட்டாசி சனிக்கிழமையையொட்டி தேவஸ்தானம் வெளியிட்ட புது அப்டேட்..!
Author: Babu Lakshmanan13 அக்டோபர் 2022, 11:45 காலை
திருப்பதி: 4வது புரட்டாசி சனிக்கிழமையையொட்டி திருப்பதி திருமலையான் கோவிலில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், முக்கிய அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
நாளை மறுநாள் சனிக்கிழமை புரட்டாசி மாதத்தில் ஏற்படும் நான்காவது சனிக்கிழமை ஆகும். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை வழிபடுவது தமிழக பக்தர்களுக்கு வழக்கம்.
இந்த வழக்கத்தை ஆந்திராவின் சித்தூர், திருப்பதி, நெல்லூர், கடப்பா, சத்திய சாய் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் மக்களும், பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் பின்பற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு முதல் திருப்பதி மலையில் மீண்டும் பக்தர்கள் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் இலவச தரிசனத்திற்காக சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
எனவே, இலவச தரிசனத்திற்காக 24 மணி நேரமும், 300 ரூபாய் தரிசனத்திற்காக மூன்று மணி நேரமும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி கும்பிட்டு செல்கின்றனர் .
இந்த நிலையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள காரணத்தால் நாளை (வெள்ளி) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
0
0