இது அரசியல் செய்ய வேண்டிய நேரமில்லை… மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுங்கள் : காங்கிரஸ் தலைவர் வேண்டுகோள்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2023, 9:59 pm

ஒடிசா ரெயில் விபத்தில் 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்புப்பணி, சிகிச்சை பெறுதல் போன்ற வேலைகளில் அரசு இயந்திரம் துரிதமாக இயங்கி வருவதால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் எழுப்பவில்லை. ஆனால் விபத்து குறித்து பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் ஆகியோரிடம் கேட்க ஏராளமான கேள்விகள் உள்ளன என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே, காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் சீரமைப்பு பணியில் ஈடுபடுமாறு வலியுறத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒடிசா ரெயில் விபத்து மூலம் நாடு முழுவதும் பெரும் சோகம் ஏற்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் முடிந்த அளவிற்கு உதவி செய்ய வலியுறுத்தியுள்ளேன். பல மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் ஒடிசா சென்றிருப்பார்கள் அல்லது விரைவில் சென்றடைவார்கள்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களிடம் பிரதமர் மோடி மற்றும் ரெயில்வே மந்திரி ஆகியோரிடம் கேட்க ஏராளமான கேள்விகள் உள்ளன. ஆனால், மீட்பு மற்றும் நிவாரணம் தற்போது முக்கியம் என்பதால் கேள்விகள் காத்திருக்கின்றன. இந்த விபத்து எப்படி நடந்தது? யார் பொறுப்பு ஏற்பது என்பதை கண்டறிய வேண்டும் என்று பிரதமரிடம் கேட்க விரும்புகிறேன்.
நாம் அனைவரும் ஏற்கனவே பாதுகாப்பு பற்றி பேசுகிறோம்.

ஆனால், ரெயில்வே வரலாற்றில் இதுவரை நடைபெறாத நிகழ்வு தற்போது நடைபெற்றுள்ளது. ஆனால் இதுகுறித்து பின்னர் விவாதிக்கலாம். ஆனால், மத்திய அரசுடன் ஒன்றிணைந்து மக்களுக்க உதவி செய்யக் கூடிய நேரம் எனத் தெரிவித்துள்ளார்.

  • monalisa viral girl soon get chance to act in serial பட வாய்ப்பு பறிபோனால் என்ன?… வைரல் பெண் மோனலிசாவுக்கு வந்த திடீர் வாய்ப்பு?