இந்திய வரலாற்றில் இதுவே முதன்முறை.. இஸ்லாமியர்கள் இல்லாத முதல் அமைச்சரவை : பாயும் கண்டனங்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2024, 2:33 pm

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார்.

அவருடன் மொத்தம் 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் 61 பேர் பா.ஜ.க. எம்.பி.க்கள் ஆவர். கூட்டணி கட்சிகளை சேர்ந்த 11 பேருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டு இருக்கிறது.

இதில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு தலா 2 பதவிகளும், மீதமுள்ள 7 கட்சிகளுக்கு தலா ஒரு பதவியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சர்களுக்கு நேற்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் இந்த முறை இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை.

மத்திய அமைச்சரவையில் இஸ்லாமியர் இல்லாமல் இருப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும். பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக கடந்த 2014 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற போது, நஜ்முல்லா ஹெப்துல்லா சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதே போன்று, 2019 ஆம் ஆண்டு பதவியேற்ற போது நக்விக்கும் சிறுபான்மையினர் நலத்துறையே ஒதுக்கப்பட்டது.

மேலும் படிக்க: ரேஸில் முதல் ஆளாக குதித்த திமுக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : வேட்பாளர் அறிவிப்பு!

18 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த இஸ்லாமிய வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறாததே அமைச்சரவையில் இஸ்லாமியர் இடம்பெறாததற்கு காரணமாக கூறப்படுகிறது.

கீழ் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 24 இஸ்லாமிய எம்.பி.க்களில் 21 பேர் இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் ஆவர். இதர மூவர் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் அசாதுதீன் ஓவைசி, ஜம்மு காஷ்மீரை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர்களான அப்துல் ரஷீத் ஷேக் மற்றும் முகமது ஹனீஃபா ஆவர்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!