இதுதான் பாஜக அரசின் தகுதி.. மத்திய பாஜக பெண் அமைச்சரின் கருத்துக்கு கனிமொழி எம்பி அதிருப்தி!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 October 2023, 10:03 pm

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடைபெற்ற தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்தியாவின் உண்மையான நிலவரத்தை அறியாமல் உலக பட்டினி குறியீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

140 கோடி மக்களில் வெறும் 3 ஆயிரம் பேரிடம் இருந்து மட்டும் கருத்து கேட்டு வெளியிடப்பட்ட பட்டியல் மூலம் எப்படி உண்மையான நிலவரத்தை நம்மால் அறிய முடியும் என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் ஸ்மிருதி இரானியின் கருத்தை விமர்சித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி, தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக பட்டினி குறியீடு பட்டியல் தயார் செய்யப்பட்ட முறையை அறிந்து கொள்ளாமல் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அதை விமர்சித்து பேசியிருப்பது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஊட்டச்சத்து குறைபாடு, உணவு தட்டுப்பாடு, குழந்தைகள் உயிரிழப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் மத்திய பா.ஜ.க. அரசின் தகுதி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் இந்த பேச்சு மூலம் தெரியவந்திருப்பதாக கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்
  • Close menu